கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்

Bookmark and Share

கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்

பல ஹிட் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய சக்திவேல் பெருமாள் சாமி இயக்குனராக புரமோஷனாகியிருக்கும் படம் உறுமீன். பாபி சிம்ஹா ஹீரோ, ரேஷ்மி மேனன் ஹீரோயின்.

மெட்ராஸ் கலையரசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். "உறுமீன் என்றால் பெரிய மீன் என்று பொருள். ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. என்பதற்கு ஏற்ப செயல்படுவதுதான் இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள்.

ஊழியர்களின் உழைப்பை சுரண்டி அவர்களுக்கு சில சலுகைகளை வீசி எறிந்து கொழுப்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் பாலிசி. அதன் முகத்திரையை கிழிப்பதுதான் உறுமீன் கதை.

இதற்காக நிறைய மெனக்கெட்டு, பல தகவல்களை திரட்டி திரைக்கதை அமைத்திருக்கிறோம்.  சமூகத்தில் இப்போது நடக்கும் சில ஏமாற்று வித்தைகளையும், மக்கள் அவர்கள் அறியாமலேயே எப்படி ஏமாறுகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டுகிறோம்.

ஆக்ஷன் த்ரில்லர் கதையில் அழுத்தமான காதலும் ஆழமான கருத்தும்  இருக்கிறது" என்கிறார் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி.


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions