காமெடி நடிகை இமேஜை நானே உருவாக்கி கொண்டேன்: ஊர்வசி சொல்கிறார்

Bookmark and Share

காமெடி நடிகை இமேஜை நானே உருவாக்கி கொண்டேன்: ஊர்வசி சொல்கிறார்

ஹீரோயினாக அறிமுகமாகி இன்று காமெடி குணசித்திர நடிகையாக உருவெடுத்திருப்பவர் ஊர்வசி. இந்த இமேஜை தானே உருவாக்கிக் கொண்டது என்கிறார் ஊர்வசி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். இப்போதும் காதல் காட்சிகளில் நெருங்கி நடிப்பது என்றால் கூச்சமாக இருக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை.

காதல் காட்சிகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் அதில் கொஞ்சம் காமெடியை சேர்க்க ஆரம்பித்தேன். அது மக்களுக்கு பிடித்து விட அதையே தொடர்கிறேன். அம்மா கேரக்டர்களை காமெடியாக்கி அதன் தன்மையை நான் கெடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு என் மீது வைக்கப்படுவதுண்டு.

இதுவும் நானே ஏற்படுத்திக் கொண்டது தான். அம்மா என்றால் கணவனுக்காக அழ வேண்டும், மகனுக்காக உழைக்க வேண்டும் என்றுதான் சினிமாக்கள் காட்டி வந்தது. நிஜத்திலும் அப்படித்தான்.

சிரிப்பு என்பதே இல்லாத அம்மாக்களின் கேரக்டரை சிரித்த கேரக்டர்களாக ஏன் மாற்றக்கூடாது என்று கருதி அம்மா கேரக்டரை மாற்றினேன். அதையும் மக்கள் ரசித்தார்கள் தொடர்ந்து நடித்தேன். நடித்துக் கொண்டே இருப்பேன். என்கிறார் ஊர்வசி


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்
ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?
21 வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன் - ஊர்வசி
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
‘குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டார்’ நடிகை ஊர்வசி மீது மேலும் ஒரு பெண் புகார்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
நடிகை ஊர்வசி போதைக்கு அடிமை கணவர் பரபரப்பு புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions