விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்?

Bookmark and Share

விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்?

இன்றைய தேதியில் கோலிவுட் தொடங்கி பிற மொழி படத்துறைகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் - உத்தமவில்லன்தான்.

கமல்ஹாசன் நடிப்பில்,  லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கியுள்ள இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை உலகம் முழுக்க ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.உத்தம வில்லன் படம் சில தினங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. உத்தம வில்லன் படத்துக்கு அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்பதைக்குறிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளோ... வசனங்களோ இல்லை என்றும் தணிக்கைக்குழுவினர் தெரிவித்தார்களாம்.  

அக்குழுவில் இடம்பெற்ற சிலர், சமீபத்தில் நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறப்பான படம் உத்தமவில்லன்தான் என்று தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு தொலைபேசியில் பாராட்டியதாகவும் தகவல்.இதற்கிடையில் சில அமைப்புகள் உத்தமவில்லன் படத்தை எதிர்த்து தணிக்கை அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே படத்தைப் பார்த்து பரம திருப்தியைடந்திருந்த தணிக்கைக்குழுவினர் அந்த அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். உத்தமவில்லன் படத்தின் தணிக்கை  முடிந்த உடன்  வெளியீட்டு வேலைகள் சூடுபிடித்துள்ளன.மே-1-ஆம் தேதி உத்தமவில்லன் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.  

கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் படத்தின் வசூலையும், சாதனையையும் உத்தமவில்லன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்
ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்!- இயக்குநர் கவுதமன்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions