உத்தவில்லன் படத்துக்கு வழிவிடும் படங்கள்

Bookmark and Share

உத்தவில்லன் படத்துக்கு வழிவிடும் படங்கள்

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடித்திருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இதனால் இதே நாளில் வெளியாவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த திருப்பதி பிரதர்ஸின் தயாரிப்பில் உருவாகி உள்ள இன்னொரு படமான இடம் பொருள் ஏவல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுவிட்டதுசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

யுவன்சங்கர்ராஜா இசையில் வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார்.

மதுரையில் சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷின் கதை இது என்று சொல்லப்படுகிறது.

இடம்பொருள் ஏவல் படம் மட்டுமல்ல, அருண்விஜய் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகிவரும் வா டீல் படமும் மே 1ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. 

இதேப்போல் வா டீல் படத்தை மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

கமல் நடித்த உத்தமவில்லன் படம் வெளிவருவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.இந்த இரண்டு படங்களைத் தவிர விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம், யுடிவி தயாரித்திருக்கும் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய இரண்டு படங்களும் மே 1ஆம் தேதி வெளியாவதாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த இரண்டு படங்களும் உத்தமவில்லன் வெளியாகும் அதே தினத்தில் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா அல்லது கடைசி நேரத்தில் வெளியேறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions