தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `சரவணன் இருக்க பயமேன்' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உதயநிதி தற்போது `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் உதயநிதி இணையவிருக்கிறார்.தமிழில் வெளியான `காஞ்சிவரம்' என்ற படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதி நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்த தகவலை உதயநிதியே அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"தனது அடுத்த படத்தில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதில் மகிழ்ச்சி.

அந்த படத்தை மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.திலீஷ் போத்தன் இயக்கத்தில், கடந்த ஆண்டு மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்'.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions