உத்தமவில்லன் உடன் மோதும் உதயநிதி!

Bookmark and Share

உத்தமவில்லன் உடன் மோதும் உதயநிதி!

கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு வந்த கமல் தற்போது டப்பிங் பேசி வருகிறார்.

தான் டப்பிங் பேசும்போது மட்டுமல்ல, மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும்போது அப்படத்தின் இயக்குநரைப்போல் அருகில் இருந்து கவனித்து வருகிறார் கமல். தற்போது நாசர் டப்பிங் பேசி வருகிறார்.

கமலும் உடனிருந்து மெருகேற்றி வருகிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இசை வெளியீடு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து உத்தம வில்லன் படத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  

கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், ஊர்வசி, இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் முதலானோர் நடித்துள்ளனர்.  

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது உத்தமவில்லன். இப்படம் வெளியாகும் ஏப்ரல்-2 ஆம் தேதியன்றுதான் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள நண்பேன்டா படமும் ரிலீசாகவிருக்கிறது. எனவே இரண்டு பட நிறுவனங்களும் இப்போதே தியேட்டர்களை வளைக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions