3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!

Bookmark and Share

3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்த உத்தமவில்லன் படம் மே 1 அன்று திரைக்கு வரவில்லை. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பல மணி நேரம் பஞ்சாயத்து நடந்து மறுநாள் மே 2 ஆம் தேதி மதியம்தான் படம் ரிலீஸ் ஆனது.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி மே 1 ஆம் தேதி காலை 9 மணிக்கே பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதற்கு முன் அப்படத்தின் பி.ஆர்.ஓ. ஒரு அறிவிப்பு செய்தார்.

அதாவது தியேட்டர்களில் திரையிடப்படும் படம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடக்கூடியது என்றும்... உத்தமவில்லன் படத்தை முழுமையாய் பத்திரிகையாளர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக 3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தை திரையிடுவதாக சொல்லப்பட்டது.

3 மணி நேரம் ஓடிய படம் என்பதாலோ என்னவோ பலரும் நெளிய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி... அனைத்து தியேட்டர்களுக்கும் கூட 3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தையே அனுப்பி இருக்கிறார்கள்.

அதுவே தற்போது உத்தமவில்லன் படத்துக்கு மைனஸாகி, நெகட்டிவ்வான டாக் பரவ காரணமாகிவிட்டது. வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக், ட்விட்டரில் 3 மணி நேரம் ஓடுவதை மட்டுமே குறையாக சொல்லி வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் குரல் கமல் காதில் விழுமா? 


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions