உத்தமவில்லன் ரிலீஸ் ஏப். 10க்கு தள்ளிப்போனது!

Bookmark and Share

உத்தமவில்லன் ரிலீஸ் ஏப். 10க்கு தள்ளிப்போனது!

ஏப்ரல் 2ம் தேதி வெளியாக இருந்த உத்தமவில்லன், ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.

கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமல், எட்டாம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டில் நடிகர் என இரண்டு வித்தியாசமான பரிமாணங்களில் நடித்துள்ளார்.

கமல் உடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி, ஜெயராமன், நாசர், மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், சங்கராபரணம் கே.விஸ்வநாத் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தது.

சமீபத்தில் படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டன. முன்னதாக இப்படத்தை ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

சில பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளி போகிறது. அதாவது ஏப்ரல் 2ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions