ஒரே நாளில் மோதும் அப்பா - மகள்

Bookmark and Share

ஒரே நாளில் மோதும் அப்பா - மகள்

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு குடும்பத்துக்குள்ளேயே பல நட்சத்திரங்கள் இருப்பதில் முதன்மையான குடும்பம் கமல்ஹாசனுடையது. அப்பா கமல்ஹாசன் தயாரிப்பாளர் , இயக்குனர், முன்னணி ஹீரோவாக இருக்க அவருடைய மகள்களில் ஸ்ருதிஹாசன் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.

அக்ஷரா ஹாசன் இப்போதுதான் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்போது கமல்ஹாசனும், ஸ்ருதிஹாசனும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொள்ள உள்ளன.

கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள 'உத்தம வில்லன்' படம் மே 1ம் தேதியும், ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ள 'கப்பார் இஸ் பேக்' ஹிந்திப் படமும் மே 1ம் தேதியும் வெளியாகி உள்ளது.  

'உத்தம வில்லன்' படம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகிறது. அதே போல் 'கப்பார் இஸ் பேக்' ஹிந்திப் படமும் இந்தியாவில் பல மாநிலங்களில் வெளியாகிறது.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜயகாந்த் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'ரமணா' படத்தின் ரீமேக்தான் 'கப்பார் இஸ் பேக்' படம்.அப்பா, மகள் இருவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஒரு ஆச்சரியமான விஷயமாகவே திரையுலகத்தில் பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions