வில்லன்கள் கலந்து கொள்ளும் \'உத்தம வில்லன்\' இசை விழா

Bookmark and Share

வில்லன்கள் கலந்து கொள்ளும் \'உத்தம வில்லன்\' இசை விழா

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில், கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீடு மார்ச் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டை வித்தியாசமாக நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். தமிழ்த் திரையுலகில் இதுவரை வில்லன்களாக நடித்துள்ள சில முக்கிய நடிகர்களை அழைத்து விழாவை நடத்தலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீடு என்றால் யாராவது பிரபல நட்சத்திரங்கள், அல்லது பிரபல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரை வரவழைப்பதுதான் வழக்கம்.

ஆனால், படத்தின் தலைப்பே வித்தியாசமாக 'உத்தம வில்லன்' என இருக்கும் போது இசை வெளியீட்டில் அவர்களை அழைத்து கௌரவப்படுத்துவதுதான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.

அதுவும் சரியானதுதான், ஒரு படத்தில் ஒரு நாயகனுக்கு பெயர் கிடைக்க வேண்டுமென்றால் அவருக்கு எதிராக பவர்ஃபுல் வில்லன் இருந்தால்தான் நாயகனும் பெயர் வாங்க முடியும்.

அந்தக் காலம் தொட்டே தமிழ் சினிமாவில் வில்லனாகவே நடித்து மறைந்து போனவர்களும் இருக்கிறார்கள். வில்லன்களை மட்டும் அழைத்து இப்படி ஒரு விழா நடக்கும்பட்சத்தில் அதுவும் கவனிக்கப்படும்.    


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions