கோடைக் கொண்டாட்டத் திரைப்படங்கள் எவை ?

Bookmark and Share

கோடைக் கொண்டாட்டத் திரைப்படங்கள் எவை ?

மார்ச் மாதம் முடிந்தாலே தேர்வு நேரம் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகிவிடும். பெரும்பாலான பள்ளிகளில் மார்ச் மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிந்து விடும். சில பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைகிறது.

அதோடு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும்  அடுத்த ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்தால் கூட விடுமுறை நாட்களும் ஆரம்பமாகிவிடுதால் திரைப்படங்களின் வரவேற்புக்கு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு இருக்கவே செய்யும்.

ஏப்ரல் 2ம் தேதியே கோடை விடுமுறைப் படங்களின் வெளியீடுகள் ஆரம்பமாகி விடுகிறது. அன்றைய தினத்தில் 'நண்பேன்டா, கொம்பன், சகாப்தம்' ஆகிய படங்களும், ஏப்ரல் 10ம் தேதி 'ஓ காதல் கண்மணி' திரைப்படமும், ஏப்ரல் 17ம் தேதி 'உத்தம வில்லன், காஞ்சனா 2' படங்களும், 24ம் தேதி 'வை ராஜா வை' திரைப்படமும், மே 1ம் தேதி “இடம் பொருள் ஏவல், வாலு, மாஸ்'  ஆகிய படங்களும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், “அப்பா டக்கர், இந்தியா பாகிஸ்தான், இது நம்ம ஆளு, கங்காரு, நம்பியார், மாப்பிள சிங்கம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், பென்சில், வா டீல், யட்சன், புறம்போக்கு” ஆகிய படங்களும் கோடை விடுமுறையில் வெளிவரவும் வாய்ப்புள்ளது.

இத்தனைப் படங்களின் பட்டியலைப் பார்க்கும் போது இந்த ஆண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 250ஐத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions