உத்தமவில்லன் இசைவிழாவில் நடிகைகளின் நடனம்

Bookmark and Share

உத்தமவில்லன் இசைவிழாவில் நடிகைகளின் நடனம்

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்து வரும் படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள 'உத்தம வில்லன்' படத்தில் கமலுக்கு ஜோடியாக  பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், ஊர்வசி, ஜெயராம், நாசர், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.  ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாகிறது.  

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி உறுதி செய்துள்ளார். அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

மார்ச் 1-ஆம் தேதி அன்று, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் 'உத்தம வில்லன்' ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. உத்தமவில்லன் படத்தில் கமல் ஆடியுள்ள ஆட்டக்களரி எனும் நடனம் இந்தவிழாவில்  நடைபெறவிருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த கலைஞர்கள் ஆட்டக்களறி நடனத்தில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்துள்ள பூஜா குமார், ஆன்ட்ரியா முதலானோரும் நடனம் ஆட இருக்கிறார்கள்! பெங்களூரில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை  நடந்து வருகிறது.

இந்த நடன ஒத்திகையில் பங்கேற்க பூஜா குமார் பெங்களூர் சென்றுள்ளார். ஆன்ட்ரியா சில தினங்களில் செல்ல இருக்கிறார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions