உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Bookmark and Share

உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

திருப்பதி பிரதர்ஸ், தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காதது தொடர்பாக, உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உத்தமவில்லன் படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தங்கம் சினிமாஸ் நிறுவனத்திடம், அப்பட பணிகளுக்காக, ரூ. 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தது. அந்த பணத்தை குறித்தநேரத்தில் திருப்பித்தரவில்லை.

இந்நிலையில், தங்களிடம் வாங்கிய பணம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திருப்பித்தரவில்லை. எனவே, உத்தமவில்லன் படத்திற்கு தடைகோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பதி பிரதர்ஸ் சார்பில், அதன் வக்கீல், ரூ. 1 கோடியை தருவதாக தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions