இந்த வாரம் சிறு படங்களின் வாரம்

Bookmark and Share

இந்த வாரம் சிறு படங்களின் வாரம்

இந்த மாதம் உத்தம வில்லன், வை ராஜா வை, புறம்போக்கு, 36 வயதினிலே, இந்தியா பாகிஸ்தான் போன்ற பெரிய படங்கள் வெளிவந்தது. ஆனால் வருகிற 22ந் தேதி வெள்ளிக்கிழமை முழுக்க முழுக்க சிறுபட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.

டிமாண்டி காலனி, சிறுவாணி, விந்தை, கமரகட்டு, நண்பர்கள் நற்பணி மன்றம், திறந்திடு தீசே என்ற 6 படங்கள் ஒரே நாளில் வெளிவருகிறது. இதில் டிமாண்டி காலனி அருள்நிதி நடித்துள்ள திகில் படம்.

இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் ஹீரோயின் கிடையாது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். திறந்திடு தீசே சஸ்பென்ஸ் திரில்லர் படம்.

ஒரு மது பாருக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவாணி எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் கதை, இயக்குனர் ராதாபாரதி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் நண்பர்கள் நற்பணி மன்றம்.

திருமணத்துக்கு பிறகும் தொடரும் நட்பு சம்பந்தமான படம். கமரகட்டு பள்ளி மாணவர்களின் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் பற்றிய படம். விந்தை ஒரு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடையும் காதல் ஜோடிகளின் கதை.

ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம். 6 படங்களில் எந்த படம் தாக்கு பிடிக்கும், எந்த படம் ஆச்சர்ய வெற்றியை கொடுக்கும் என்பது 22ந் தேதி மாலை தெரியும்.


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions