'உத்தம வில்லன்' முதல் நாள் ரிப்போர்ட்...

Bookmark and Share

'உத்தம வில்லன்' முதல் நாள் ரிப்போர்ட்...

'உத்தம வில்லன்' திரைப்படம் மே 1ம் தேதியன்றே இந்தியாவில் வெளியாகியிருக்க வேண்டிய படம். ஆனால், சில நிதிப் பிரச்சனைகள் காரணமாக ஒன்றரை நாள் தாமதமாக நேற்று மதிய காட்சிக்குதான் படம் வெளியானது.

வெளிநாடுகளில் மே 1ம் தேதியன்றே வெளியாகி அங்கெல்லாம் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் இதற்கு முன் நடித்து வெளிவந்த 'விஸ்வரூபம்' படத்திற்கும் நல்ல நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

சுமார் இரண்டு வருடம் கழித்துதான் கமல்ஹாசன் நடித்த ஒரு படம் வெளிவந்தாலும் அவருக்கிருக்கும் ரசிகர்கள் அதே அளவில் வந்து படத்தைப் பார்த்து வெளிநாடுகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

மே 1ம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் தங்களது அபிமான நட்சத்திரத்தின் படத்தைக் காண முடியாமல் திரையரங்குகளுக்குச் சென்று ஏமாந்து போன கமல்ஹாசன் ரசிகர்கள் நிறையவே வருத்தப்பட்டுப் போனார்கள்.

சொன்ன தேதியில் ஒரு படம் வெளிவராமல் போனால் படத் தயாரிப்பாளர்களிலிருந்து அந்தப் படத்தின் இயக்குனர் நட்சத்திரங்கள் உட்பட அனைத்து கலைஞர்களுக்குமே மிகவும் வருத்தம் இருக்கும். அதுவும் கமல்ஹாசன் போன்ற ஒரு பெரிய நடிகரின் படம் அறிவித்த நாளில் வராமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒன்றரை நாள் தாமதமாக வந்தாலும் நேற்று மதியக் காட்சி, மாலை காட்சி, இரவுக் காட்சி ஆகிய மூன்று காட்சிகளுமே தமிழ்நாடு முழுவதிலும் பெரும்பாலான திரையரங்குகளில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவுள்ள பல திரையரங்குகளில் இன்று அனைத்து காட்சிகளுக்குமான முன்பதிவு மிக அதிக அளவில் நடந்து முடிந்துள்ளது. திரையுலகத்தினருக்கும், கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் படம் அதிகமாக கவர்ந்துள்ளது.

கமல்ஹாசன் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் இந்த படத்தை கமல்ஹாசன் கொடுக்கவில்லை.

முற்றிலும் குடும்பப்பாங்கான ஒரு படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன் என்று பொதுவான ரசிகர்கள் சொல்கிறார்கள். குடும்பத்துடன் சென்று பார்க்கும்படியான படமாகத்தான் இந்தப் படம் இருக்கிறது.

ஆனாலும் சராசரி ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் பட்சத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் மிகச் சிறந்த நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமையும் என அனைத்து ரசிகர்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions