உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு

Bookmark and Share

உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு

கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான உத்தமவில்லன் படம், Herotalkies.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல், கே.பாலசந்தர், விஸ்வநாத், நாசர், ஊர்வசி, ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து சமீபத்தில் வெளியான படம் "உத்தமவில்லன்".

படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காதபோதிலும், கமலின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. இந்தியாவை தவிர்த்து, மற்ற நாடுகளில் வாழும் மக்களும் பார்க்கும் வகையில், உத்தமவில்லன் படம் Herotalkies.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபுல் ஹெச்.டி 1080p உடன் 5.1 Surround sound வசதியுடன் படம் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் படம் பார்ப்பவர்களுக்கு, சிறந்த ஹோம்தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தை நிச்சயம் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Herotalkies.com இந்த இணையதளத்தில் தான் ரஜினி நடித்த லிங்கா, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷ் நடித்த அனேகன் உள்ளிட்ட படங்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions