'உத்தம வில்லன்' - அடுத்த நீளமான படம்...

Bookmark and Share

'உத்தம வில்லன்' - அடுத்த நீளமான படம்...

தமிழில் சமீப காலமாக திரைக்கு வரும் படங்களின் 'ரன்னிங் டைம்' என்று சொல்லக் கூடிய படங்களின் ஓடும் கால அளவு மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. படங்களின் நீளத்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் சோர்வடைகிறார்கள் என்று தெரிந்த பின்தான் படத்தின்  நீளத்தை, வெளியீட்டிற்குப் பின் அவசரம் அவசரமாகக் குறைப்பார்கள்.

'லிங்கா, ஐ, என்னை அறிந்தால்' என சமீபத்தில் வெளிவந்த சில முக்கிய படங்கள் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை ஓடும் விதத்தில்தான் இருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் இப்படிப்பட்ட நீளமான படங்களைப் பார்ப்பதில் அதிகமான விருப்பத்தைக் காட்டுவதில்லை.

அதிக பட்சமாக 2 மணி நேரம் 20 நிமிடம் அல்லது 2 மணி நேரப் படம் என்றால் மட்டுமே கொஞ்சம் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பது உளவியல் ரீதியான ஒரு கருத்தாக வெளிப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் மே 1ம் தேதி வெளிவர உள்ள 'உத்தம வில்லன்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 52 நிமிடம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய பெரிய படங்களைப் போலவே தற்போது 'உத்தம வில்லன்' படமும் நீ....ளமான கால அளவில் உள்ளது.

இதை அப்படியே விட்டுவிடுவார்களா அல்லது பட வெளியீட்டிற்குப் பின் குறைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும். இந்த முடிவு கண்டிப்பாக கமலஹாசன் கையில்தான் இருக்கும்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions