உத்தமவில்லன் - மீடியாக்களை சந்திக்கும் கமல்

Bookmark and Share

உத்தமவில்லன் - மீடியாக்களை சந்திக்கும் கமல்

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம் தொடர்பாக, கமல், இன்று தனது இல்லத்தில் மீடியாக்களை சந்திக்க உள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமலஹாசன், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதோடு மட்டுமல்லாது இரட்டை வேடங்களில் நடித்துள்ள உத்தமவில்லன் படம், விரைவில் வெளியாக உள்ளது.  

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. படத்தின் 2 டிரைலர்களும், கமல் ரசிகர்களை மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், உத்தமவில்லன் படம் தொடர்பாக, கமல் இன்று மீடியா நண்பர்களை சந்திக்க உள்ளார். இரண்டு செசன்களாக நடக்க உள்ள இந்த சந்திப்பில், முதற்கட்டமாக, பத்திரிகை ஊடக நண்பர்களையும், அதனை அடுத்து தொலைக்காட்சி ஊடக நண்பர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

கமலஹாசனின் குரு கே.பாலசந்தர், உத்தமவில்லன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விஸ்வநாத், பூஜா குமார், ஆண்டரியா, பார்வதி மேனன் உள்ளிட்டோர் உத்தமவில்லன் படத்தில் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions