'உத்தம வில்லன்' - முழுமையான கமர்ஷியல் படம்...

Bookmark and Share

'உத்தம வில்லன்' - முழுமையான கமர்ஷியல் படம்...

கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ள படம் 'உத்தம வில்லன்'.

எப்போதுமே கமல்ஹாசன் படம் வெளிவருகிறதென்றால் அதைப் பற்றி பல விதமான தகவல்கள், வதந்திகள் பரவும். 'உத்தம வில்லன்' படத்தின் டிசைன்கள், சில புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுமே சிலர் இந்தப் படம் கமல்ஹாசனின் ''குணா, நம்மவர், குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ்,” ஆகிய படங்களின் வரிசையில் இடம் பெறும் படம் என்ற தவறான தகவலைப் பரப்பி வருகிறார்களாம்.

'தெய்யம்' கலைஞர்களின் ஒப்பனையில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்களும், டிசைன்களும் வெளிவந்ததால்  அப்படி ஒரு கருத்து பரவியிருக்கிறது.

ஆனால், 'உத்தம வில்லன்' அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இடம் பெறும் படமல்ல, “பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்,  தசாவதாரம்” படங்களின் வரிசையில் இடம் பெறும் படம் என படத்தைப் பார்த்த சில முக்கியமானவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தை அவர்களுக்குக் காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்தவர்கள் கிளைமாக்ஸில் மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்களாம். அவர்கள் சொன்ன கருத்துக்களால் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ந்து போய்விட்டார்களாம். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட்-டாபிக் ஆக இருக்கிறது. 

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions