400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!

Bookmark and Share

400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!

உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை தீர்ந்ததையடுத்து, தமிழகம் முழுக்க இன்று மதியம் 1 மணி முதல் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸானது.

கமல்ஹாசன் கதை, திரைக்கதையில், அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் படம் உத்தம வில்லன்.

இப்படம் நேற்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், உத்தம வில்லன் படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை.

இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இப்பிரச்னையை தீர்க்க நேற்று முதல் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

நேற்று இரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்து சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து படத்திற்கான பிரச்னை தீர்ந்ததாகவும் படம் மதியம் முதல் ரிலீஸாகும் என்று கூறினார்.

400 தியேட்டர்களில் வெளியானது. இன்றாவாது படம் வெளியாகுமா என்று தியேட்டர் வாசல்களில் தவம் கிடந்து வந்த ரசிகர்கள் படம் ரிலீஸ் என்று அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு மேல் சுமார் 400 தியேட்டர்களில் உத்தம வில்லன் படம் ரிலீஸாகியுள்ளது.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
உத்தம வில்லன் ரிலீஸ்: அரசு தலையீடு எதுவும் இல்லை - சரத்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions