உத்தமவில்லன் படத்துக்கு மீண்டும் சிக்கல்!?

Bookmark and Share

உத்தமவில்லன் படத்துக்கு மீண்டும் சிக்கல்!?

லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என திரையரங்க அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் அறிவித்தனர்.

இப்பிரச்சனைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், கில்டு, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அடங்கிய தமிழ்த் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, விளக்கம் அளித்தனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, "உத்தம வில்லன் வெளியீடு தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்தன. அவற்றை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டோம். விஸ்வரூபம் பிரச்சனையை உத்தம வில்லன் படத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற செலவுகளை நாங்களே ஏற்பதாக தெரிவித்துள்ளோம்." என லிங்குசாமி கூறினார். அதோடு, உத்தம வில்லன் பிரச்சனை முடிந்துவிட்டது. படம் திட்டமிட்டபடி வெளியாகும் என சொல்லப்பட்டது.

இதையடுத்து உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டு வேலையில் லிங்குசாமி தரப்பு பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலர், யாருடைய கட்டளைக்கும் அடிபணிய மாட்டோம்.

விஸ்வரூபம் விவகாரத்தில் முடிவு தெரியும்வரை ஏற்கனவே திட்டமிட்டபடி உத்தமவில்லன் படத்தை வெளியிடவிட மாட்டோம் என மீடியாக்களை அழைத்து அறிவிக்க உள்ளனர். இதன் காரணமாக உத்தமவில்லன் படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions