உத்தம வில்லன் வழக்கு தள்ளுபடி!

Bookmark and Share

உத்தம வில்லன் வழக்கு தள்ளுபடி!

கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷித்து சார்பில் எஸ்.ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்தில் என் உதிரத்தின் விதை... என்றொரு பாடலில் வெங்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள் என்ற வரி வருகிறது.

தீய சக்திகளை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவுள் கடவுள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து இருக்கிறார். அப்படியிருக்கையில் இந்த வரி இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.

எனவே என் உதிரத்தின் பாடலில் இருந்து வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கை துறை மற்றும் தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் மே 1ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று(ஏப்., 27ம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தள்ளுபடி செய்தார்.

 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions