உத்தம வில்லன் இன்று வெளியாக வாய்ப்பில்லை.?

Bookmark and Share

உத்தம வில்லன் இன்று வெளியாக வாய்ப்பில்லை.?

உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படாததால் படம் இன்று வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது. தடை பல கடந்து உத்தம வில்லன் படம் இன்று(மே 1ம் தேதி)  வெளியாக இருந்தது.

ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படம் ரிலீஸாகவில்லை. முதலில் காலை காட்சி மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும், மதியத்திற்கு மேல் படம் வெளியாகும் என கூறப்பட்டது, பின்னர் அதுவும் நடக்காமல் போக மாலை 6.30 மணியளவில் படம் ரிலீஸாகும் என தகவல் வெளியானது.

ஆனால் இப்போது வரை எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. உத்தம வில்லன் படத்தின் புரொமோஷனுக்காக கமல், ரமேஷ் அரவிந்த், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்டவர்கள் துபாய் சென்றுள்ளதால் பேச்சுவார்த்தை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலையில் லிங்குசாமி தரப்புக்கும், விநியோகஸ்தர் தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி எந்த முடிவும் எட்டவில்லை.

ஒருவேளை சுமூக முடிவு ஏற்பட்டாலும் கூட இனி ரிலீஸ் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டால் தியேட்டருக்கு ரசிகர்களின் கூட்டம் வருமா என்பது சந்தேகம். ஆகையால் இன்று படம் வௌியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன் என்ன தெரியுமா - நடிகர் விஜய் தேவரகொண்டா!
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
என்னது விஜய் இல்லையா, பிறகு அது யார்? வதந்திக்கு முற்று புள்ளி
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions