உத்தமவில்லன் தேதியில் ஓ காதல் கண்மணி

Bookmark and Share

உத்தமவில்லன் தேதியில் ஓ காதல் கண்மணி

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படம் ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகவிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது உத்தமவில்லன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

தற்போதைய சூழலில் மே 1 அல்லது மே 15 அன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. உத்தமவில்லன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த தேதியில் அதாவது ஏப்ரல் 17 அன்று மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகவிருக்கிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், கனிஹா நடிப்பில், மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

மணிரத்னம் இயக்கும் படம் என்றால் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும்.  ஆனால் வழக்கத்துக்கு மாறாக  'ஓ காதல் கண்மணி' படத்தை மணிரத்னம் குறுகிய காலத்திற்குள் எடுத்து முடித்து, ரிலீசுக்கும் தயாராகி விட்டார்.  

'ஓ காதல் கண்மணி'படத்தை  தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் பெற்றுள்ளது!


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions