'உத்தம வில்லன்' அடுத்து எந்தப்படம் ?

Bookmark and Share

'உத்தம வில்லன்' அடுத்து எந்தப்படம் ?

கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தை ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு கமல் நடித்துள்ள எந்தப் படம் வெளியாக உள்ளது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கமல் நடிப்பில் 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் தயாராகி உள்ளன. இவற்றில் 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முற்றிலுமாக முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.

அதனால் இந்தப் படத்தைத்தான் 'உத்தம வில்லன்' படத்திற்குப் பிறகு வெளியிட அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். 'விஸ்வரூபம் 2' படத்திற்காக இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம்.

அதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

அதனால் அதை முதலில் பேசித் தீர்த்த பின்தான் படத்தின் படப்பிடிப்பை பற்றிப் பேசவே ஆரம்பிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே 'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து கமல்ஹாசன் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார்.

மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் முடித்து விட்டால் படத்தை வெளியிட்டு விடலாம் என்கிறார்கள். அதற்கு கமல்ஹாசன்தான் முடிவு செய்ய வேண்டுமாம். 'உத்தம வில்லன்' வெளியீடு முடிந்த பிறகுதான் அதைப் பற்றி கமல் முடிவெடுப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions