உத்தம வில்லன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளிபோனது

Bookmark and Share

உத்தம வில்லன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளிபோனது

கமலின் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ், தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் உத்தம வில்லன்.

கமலின் நண்பரும், நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், நாசர், எம்.எஸ்.பாஸ்கர்... என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கமல், 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் மற்றும்  21ம் நூற்றாண்டின் சினிமா நடிகராக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தம வில்லன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 2ம் தேதி உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அது ஏப்ரல் 10ம் தேதி மாற்றப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது.

இதுப்பற்றி பிரைம் மீடியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உத்தமவில்லன் படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகவில்லை. சென்சார் பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. பிரைம் மீடியா நிறுவனம் தான் உத்தம வில்லன் படத்தை அமெரிக்காவில் வெளியிட இருக்கிறது.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions