பரபரப்பான வியாபாரத்தில் 'உத்தம வில்லன்'

Bookmark and Share

பரபரப்பான வியாபாரத்தில் 'உத்தம வில்லன்'

கமலஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அவர் நடித்து எந்தப் படமும் வரவில்லை.

மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டிற்குப் பிறகு அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் வியாபாரமும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் மாத வெளியீடுகளில் மிகப் பெரும் வெளியீடாக இந்தப் படம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை, கிரிக்கெட் அனைத்தும் அப்போது முடிந்து விடும் என்பதால் தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் அப்போது அதிகமாகவே இருக்கும்.

ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவைக்கவும் மிகப் பிரம்மாண்டமாகவும் படத்தை விளம்பரப்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளார்களாம். அதனால், படத்தின் தமிழ்நாட்டு ஏரியா உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

சென்னை மாநகர வினியோக உரிமையை பல வெற்றிப் படங்களை வினியோகித்த அபிராமி மெகா மால் எடுத்திருக்கிறார்களாம். “உன்னைப் போல் ஒருவன், சிவாஜி,  அயன்” உள்ளிட்ட பல படங்களை அவர்கள் வினியோகம் செய்திருக்கிறார்கள்.

மற்ற ஏரியாக்களின் விவரம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.இதனிடையே 'உத்தம வில்லன்' படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை ஜீ தமிழ் டிவிக்கு மிகப் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படத்தையும் சேர்த்து இப்படங்களின் தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் விற்றுவிட்டார்களாம். இரண்டு படத்திற்கும் சேர்த்து 25 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருக்கலாம் என தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions