உத்தமவில்லன் படத்தைக் காப்பாற்றிய ரஜினி முருகன்!

Bookmark and Share

உத்தமவில்லன் படத்தைக் காப்பாற்றிய ரஜினி முருகன்!

சினிமாவில் ஜெயிப்பது முக்கியமில்லை, அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சினிமாவில் கிடைத்த வெற்றி நிலையானது என்ற நினைப்பில் அகலக்கால் வைத்தால் அம்பேல்தான்.

இப்படி அகலக்கால் வைத்ததால் கடந்த காலங்களில் காணமல்போன படாதிபதிகள் பலர். நிகழ்காலத்தில் இப்படியொரு சிக்கலில் சிக்கி இருக்கிறார் லிங்குசாமி.

அஞ்சான், உத்தமவில்லன், ரஜினிமுருகன், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரா..ரா.., பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத்துறையினரை திரும்பிப்பார்க்க வைத்தார் லிங்குசாமி. அஞ்சான் படத்தின் தோல்வி சுமார் 25 கோடி நஷ்டத்தை ஏற்படுத்த, உத்தமவில்லன் படத்தின் பட்ஜெட் எகிற.... பல இடங்களில் பைனான்ஸ் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார் லிங்குசாமி.

வாங்கிய கடன்கள் அனைத்தும் உத்தமவில்லன் படத்தின் பேரில். தற்போது உத்தமவில்லன் வெளியீட்டுக்குத் தயாராக, கடன் கொடுத்த பைனான்ஸியர்கள் வரிசை கட்டி வந்துவிட்டனர்.

உத்தமவில்லன் படத்தை விற்றவகையில் வரும் பணத்தைவிட, திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் தொகை அதிகமாக இருக்க.... திணறிப்போனார் லிங்குசாமி. இதனால் உத்தமவில்லன் படம் ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவானது.

இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் பேரில் வாங்கிய கடன் தொகையை ரஜினி முருகன் படத்தின் பேரில் மாற்றினர். அதன் காரணமாக உத்தமவில்லன் மீதிருந்த சுமை குறைந்து திட்டமிட்டபடி மே 1 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. மொத்தத்தில் கமலை காப்பாற்றி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions