உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!

Bookmark and Share

உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!

ரமேஷ்அர்விந்த் இயக்கத்தில், கமல் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் 55 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உத்தமவில்லன் படம் நேற்று வெளியாகவில்லை.

சுமார் 40 கோடி கடன் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்து எப்படியாவது குறித்த தேதியில் படத்தைத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு பெரும் முயற்சி செய்தார்.

அவருடன் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் அருள்பதி, பைனான்ஸியர் மதுரை அன்பு ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இவர்களுடன் ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் பங்கும் முக்கியமானதாக இருந்திருக்கிறது.

கடன் கொடுத்தவர்களிடம் நேற்றைய முன்தினத்திலிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 50 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை இன்று காலைதான் சுமுகமாக முடிந்திருக்கிறது.

உத்தமவில்லன் படத்தின்பேரில் கடன் கொடுத்தவர்களில் ஈராஸ் நிறுவனமும் மற்றும் பைனான்ஸியர் ஜஸ்வந்த் பண்டாரியும்தான் முக்கியமானவர்கள். இவ்விருவரும் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுத்தால்தான் உத்தமவில்லன் படத்தை வெளியிட அனுமதிப்பது என்பதில் பிடிவாதமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போக, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாதான் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தாராம். அதாவது, தன் நண்பர்களும் தயாரிப்பாளர்களுமான சி.வி குமார், ஒய்நாட் சஷி ஆகியோரின் ஒத்துழைப்போடு 35 கோடி ரூபாயைப் புரட்டி லிங்குசாமிக்குக் கொடுத்திருக்கிறார்.

ஞானவேல்ராஜா கொடுத்த 35 கோடிதான் உத்தமவில்லன் படப்பிரச்சனையை தீர்த்து வைத்து படம் இன்று வெளியாகவும் காரணமாக இருந்திருக்கிறது.

சென்னை, மதுரை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற ஏரியாக்களில் உத்தமவில்லன் படத்தை ஞானவேல்ராஜாதான் வெளியிடுகிறார். என்றாலும் அதையும் தாண்டி, லிங்குசாமி மற்றும் அவரது தம்பி சுபாஷ்சந்திரபோஸ் மீதுள்ள நட்பு காரணமாகவே இவ்வளவு பெரிய உதவியைச் செய்ததாக சொல்லப்படுகிறது. ஞானவேல்ராஜா செய்தது வெறும் உதவி அல்ல, பேருதவி.

 


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions