இயக்குநர் வி.சேகரின் ஜாமீன் தள்ளுபடி

Bookmark and Share

இயக்குநர் வி.சேகரின் ஜாமீன் தள்ளுபடி

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும்,  சிவன், பார்வதி சிலைகள் திருட்டு போனது.

திருடப்பட்ட 8 சாமி சிலைகளையும் விற்பதற்காக  தியாகராயநகருக்கு கொண்டு வந்த போது,  சிலை திருட்டு தடுப்பு போலீசார் சிலைகளை மீட்டு,  இந்த சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை தேடி வந்தனர்.

முதலில் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது  பிரபல சினிமா டைரக்டர் வி.சேகர் இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் திருடப்பட்ட சிலைகளை டைரக்டர் வி.சேகர் வசிக்கும் வீட்டில்தான் முதலில் மறைத்து வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் வி.சேகரை, சிலை திருட்டு போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு அவரை 7 நாட்கள் விசாரணை  போலீசார் , கோர்ட்டில் அனுமதி கேட்டனர்.  கோர்ட்டு 3 நாட்கள் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.  

ஆனால்  போலீசார் அவரிடம் ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, என்று அவரை மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைத்து விட்டனர். வி.சேகர், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு, கோர்ட்டு விசாரணைக்கு வந்தது.

அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சிலை திருட்டு தடுப்பு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வி.சேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அடுத்து செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும், என்று வி.சேகரின் வக்கீல் ராஜசேகர் தெரிவித்தார்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions