விக்ரம் படப்பிடிப்பில் நயன்தாரா இல்லையா?

Bookmark and Share

விக்ரம் படப்பிடிப்பில் நயன்தாரா இல்லையா?

அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடம் இருமுகன். இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

பலமாதங்களுக்கு முன்பே தொடங்கவேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளித்தள்ளிப்போய் இப்போது தொடங்குகிறது. இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் ஆகிய இருவரும் நடிக்கவிருக்கிறார்கள்.

படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கவிருப்பதாகவும் முதல்கட்டப் படப்பிடிப்பே அங்குதான் தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் முதல்கட்டப்படப்பிடிப்பு சென்னையில்தான் தொடங்குகிறது.

இன்று இரவு இந்தப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் நயன்தாரா இல்லையாம். நித்யாமேனன் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். மலேசியாவில் நடக்கும் படப்பிடிப்பில்தான் நயன்தாரா இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions