வாஹா படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதம் நடக்கிறது

Bookmark and Share

வாஹா படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதம் நடக்கிறது

இது என்ன மாயம் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் வாஹா. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை குறிக்கும் இந்தப் படம் இரு நாட்டு பிரச்னைகள் பற்றியதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனும், இளைஞியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வட நாட்டில் சந்திக்கும்போது வரும் பிரச்சினைகள் பற்றிய கதை.

ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. என்றாலும் காரைக்குடியில் விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக் போர்ஷன்களை அவரை மட்டும் வைத்து எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஹரிதாஸ் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படம் இது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 25 நாட்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக இயக்குனர் தலைமையிலான ஒரு டீம் காஷ்மீர் சென்று லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளது.

படப்பிடிப்புக்கு முடிவு செய்யப்பட்ட இடத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், அதன் அருகில் நில நடுக்கம் உணரப்பட்டிருப்பதாலும் தற்போதைக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

வருகிற 25ந் தேதி படப்பிடிப்பு குழு விக்ரம் பிரபுவுடன் காஷ்மீர் செல்கிறது. அதற்குள் ஹீரோயினும் முடிவாகி விடுவார் என்கிறது பட வட்டாரம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions