வாலு படத்தை அம்மாவுடன் பார்த்த சிம்பு

Bookmark and Share

வாலு படத்தை அம்மாவுடன் பார்த்த சிம்பு

சர்வதேச பெண்கள் தினத்தை, ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக கொண்டாடி கொண்டிருக்க, நடிகர் சிம்பு, அம்மா மற்றும் குடும்பத்தினருடன் வாலு படத்தை பார்த்துள்ளார்.  

அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா மோத்வானி, சந்தானம் நடித்துள்ள வாலு திரைப்படம், இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சிம்பு படம் வெளியாக உள்ளதால், அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரிவீயூ தியேட்டரில், சிம்பு, தனது அம்மா உள்ளிட்ட நண்பர்களுடன் வாலு படத்தை பார்த்தார். படம் சிறப்பாக வந்துள்ளது என்று கூறியதோடு, சிம்புவிற்கு, அவரது அம்மா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். வாலு படத்திற்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, சூரி, சந்தானம் நடித்துள்ள இது நம்ம ஆளு படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதன்பின், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions