வாலு மே 9ம் தேதி ரிலீஸ்...

Bookmark and Share

வாலு மே 9ம் தேதி ரிலீஸ்...

கோடை விடுமுறைக் கொண்டாட்டத்திற்கான படங்களின் வெளியீடு ஏப்ரல் 1ம் தேதியே ஆரம்பமாகிவிட்டது. அன்று கொம்பன் படமும் 2ம் தேதி நண்பேன்டா, சகாப்தம் ஆகிய படங்களும் வெளிவந்தன.

இன்று மிகப் பெரிய படங்கள் வரவில்லையென்றாலும் அடுத்த வாரம் இரண்டு பெரிய படங்கள் வெளிவர உள்ளன.

ஏப்ரல் 17ம் தேதி காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. ஏப்ரல் 24ம் தேதி எந்தப் படங்கள் வரப்போகின்றன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

ஆனால், மே 1ம் தேதி “உத்தம வில்லன், புறம்போக்கு, வை ராஜா வை ஆகிய படங்கள் வரப்போகின்றன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

உத்தம வில்லன் படம் மட்டுமே தமிழ்நாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்கிறார்கள். 

இதனிடையே, சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்து நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள வாலு படத்தை மே 9ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். இந்தப் படம் ஏற்கெனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா என்றுதான் திரையுலகினரே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions