வாலு திரைப்படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

Bookmark and Share

வாலு திரைப்படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சிம்பு நடிப்பில் உருவாகி நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட வாலு திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே படத்தை தயாரித்த மேஜிக் ரேஸ் நிறுவனம், நாங்கள் ஒப்பந்தம் செய்த வெளியீட்டு உரிமையை வேறு நபருக்கு கொடுத்துவிட்டதாக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

தனது மகன் நடித்த திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகவே சதி வேலைகள் நடப்பதாக டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் வாலி படத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை விசாரணை முடிந்து ஒருவேளை ‘வாலு’ திரைப்படம் ரிலீசுக்கு தடையில்லை என தீர்ப்பு வந்தால், ஏற்கனவே வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாபநாசம், பாகுபலி திரைப்படங்கள் மற்றும் அதே நாள் வெளியாக இருக்கும் தனுஷ்ஷின் ’மாரி’  ஆகிய திரைபடங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions