வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்

Bookmark and Share

வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்

பல்வேறு தடைகளை தாண்டி சிம்புவின் வாலு படம் நாளை வெளியாகவிருக்கிறது. 3 வருடங்களுக்கு பிறகு சிம்பு படம் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர். 

மேலும், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு ‘வாலு’ படத்தின் பாடல் ஒன்றில் எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜித்தை குறிப்பிட்டு பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார். அதனால், அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பாடலில் ‘தல’ அஜித்தின் ஃபேவரைட் கெட்அப்பான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றி அசத்தியிருக்கிறாராம் சிம்பு. 

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு விஜய் ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் கூடியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ‘வாலு’ படம் ரிலீஸ் ஆவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை நடிகர் விஜய் செய்திருப்பதுதான். 

இந்நிலையில், தல, தளபதி ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தனது படத்திற்கு ஆதரவு அளித்திருப்பது சிம்புவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, தல, தளபதி ரசிகர்கள் என்னுடைய படத்திற்கு ஆதரவு கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தல ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளித்து வந்துள்ளார்கள். இப்போது, என்னுடைய படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களுக்கும் சிம்பு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நீங்கள் என்னுடைய ரத்தம். உண்மையிலேயே உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. 3 வருட இடைவெளிக்கு பிறகு நான் இங்கு நிற்கிறேன் என்றால் அது உங்களால்தான். நீங்க இல்லாம நான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

சிம்புவின் வாலு படத்திற்கு அஜித், விஜய் ரசிகர்களை தொடர்ந்து தற்போது தனுஷ் ரசிகர்களும் வாலு படத்திற்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். வாலு படம் பெரிய வெற்றியடைய சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாபஸ் ஆகிறதா வாலு பட வழக்கு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions