வாலு - நீளும் அன்றே சொன்ன டிஆர்

Bookmark and Share

வாலு - நீளும் அன்றே சொன்ன டிஆர்

டி.ராஜேந்தர், உண்மையிலேயே இவர்தான் சகலகலா வல்லவர். தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என ஆளுக்கொரு ஏரியாவில் அடித்து கலக்கிக் கொண்டிருந்த போது ஆல் ஏரியாவிலும் கலெக்ஷனில் கலக்கியவர்.

இவருக்கு சினிமா மட்டும் கை வந்த கலை அல்ல, ஜோசியம் கூட நன்றாகப் பார்ப்பார். அந்த அளவிற்கு வான சாஸ்திரத்தை கரைத்துக் குடித்திருக்கிறார். பேர் ராசி, கை ராசி, என அத்தனை ராசிகளைப் பற்றியும் பேசிக் கொண்டேயிருப்பார்.

வாலு படம் இத்தனை ஆண்டு காலமாக வெளியாகாமல் என் நீண்டு கொண்டேயிருக்கிறது என்பதற்கான காரணமே அந்தப் படத்தின் தலைப்புதான் என்று அன்றே டி.ஆர். சொல்லியிருக்கிறார்.  வாலு என தலைப்பு வைத்தால் அது நீளும் என அன்றே சொன்னேன், என சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, “ஒரு மன்னன் போராட வேண்டுமென்றால் அவன் கையில்  வாள் எடுப்பான். நான் என் மகனுக்காகப் போராட இந்த வாலு வைக் கையில் எடுத்திருக்கிறேன்,” என அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

வாலு& படம் மூன்று வருடம் கழித்து வந்தாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன்தான் படத்தை டி.ஆர். வெளியிடுகிறாராம். விரைவில் தமிழ்நாடே அதிரும் அளவிற்கு ஒரு தலைக் காதல் படத்தை வெளியிட உள்ளேன் என்றும் சொல்லியிருக்கிறார்.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions