மீண்டும் தொடங்கிய வாலு படத்தின் படப்பிடிப்பு!

Bookmark and Share

மீண்டும் தொடங்கிய வாலு படத்தின் படப்பிடிப்பு!

நிக் ஆர்ட்ஸ் சக்கரவரத்தியின் தயாரிப்பில் விஜய்சந்தரின் இயக்கத்தில் சிம்பு ஹன்சிகா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் வாலு. அந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் சொன்னபடி தீபாவளிக்கு வாலு படம் ரிலீஸ் ஆகவில்லை. பிறகு 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும், அதன் பிறகு 2014 ஆம் வருடப் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், கடைசியாக 2015 ஆம் வருடப் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டது.

2015 பொங்கலுக்கு வரவில்லை என்றதும், பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை.

பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களிலும் கூட அவ்வப்போது பல தேதிகளை அறிவித்துக்கொண்டே வந்தனர். கடைசியாக ஜூலை 3 அன்று எப்படியும் வாலு படத்தை ரிலீஸ் செய்துவிடுவோம் என்று டி.ராஜேந்தர் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு உறுதி கூறப்பட்டது.

இந்நிலையில் வாலு படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 19 என இறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டாலும் வாலு படம் இன்னும் முழுமையடையவில்லை என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.

தாறுமாறு என்ற பாடல் காட்சி இன்னும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மானாட மயிலாட புகழ் சாண்டியின் நடன அமைப்பில் நாளை முதல் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. ஜூலை 4 வரை படப்பிடிப்ப நடைபெறுகிறது.


Post your comment





Related News
என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு
தெலுங்கில் வாலு படம் டப்!
வாலுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
வாலு சிக்கல் அம்பலம் – சந்தானத்தின் சம்பளபாக்கியால்!
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி: சிம்பு உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions