வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்!

Bookmark and Share

வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்!

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள வாலு திரைப்படம் சில வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு, ஒரு வழியாக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. டிசம்பர் 24ம் தேதியன்று படம் வெளிவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி அறிவித்திருந்தார். அதன் பின் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதியன்று படம் வெளியாகும் என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை வாலு படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. நாம் கூட நேற்று வாலு; இந்த மாதமாவது வெளிவருமா என்று செய்தி வெளியிட்டிருந்தோம். 

இதனிடையே வாலு படம் முன்னர் அறிவித்தபடி வெளியாயாகததைத் தொடர்ந்து நேற்று சிம்புவின் ரசிகர்கள் டிவிட்டர் வலைத்தளத்தில் சக்ரவர்த்தி ஃபெயில்ஸ் என்ற ஹேஷ் டேக்குடன் அவரைப் பற்றி தாறுமாறாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு 'படத்தை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க என பல மீமீக்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

ஆனால், தனது ரசிகர்களின் செயல் குறித்து சிம்பு எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் சிம்பு ரசிகர்களின் விமர்சனம் குறித்தும், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் எதுவும் சொல்லாமலே இருக்கிறார். 


Post your comment





Related News
தெலுங்கில் வாலு படம் டப்!
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை
சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!
வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!
வாலு படத்தை வாங்கிய டிஆர்.?!
மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
\'வாலு\' படத்திற்கு வரவேற்பு ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions