சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!

Bookmark and Share

சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!

வாலு படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நீண்டு கொண்டே போய் ஒரு வழியாக அடுத்த வார வெள்ளிக்கிழமையான ஜுலை 17ம் தேதியன்று வெளியாக உள்ளது. அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படமும், தனுஷ் நடிக்கும் மாரி படமும் வெளியாவதாக இருந்தது. 

ரஜினி முருகன் படத்தின் வெளியீடு பற்றி எந்த சத்தத்தையும் காணோம். மாரி படம் ஜுலை 17ம் தேதியில்தான் வெளிவரும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து ஜுலை 24ம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதனால் சிம்பு ஜுலை 17ம் தேதியன்று சிங்கிள் ஆக வருகிறார்.

இரண்டு படமும் ஒரே நாளில் வெளிவந்தால் இருக்கும் திரையரங்குகளை பங்கு போட்டு ஆக வேண்டும். அதே சமயம் ஆளுக்கொரு நாளில் வந்தால் கொஞ்சம் அதிகமான திரையரங்குகள் இருவருக்குமே கிடைக்க வாய்ப்பிருக்கும். அதனால்தான் தனுஷ் தானாகவே படத்தைத் தள்ளி வைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். ஒரு வேளை சிம்பு நீண்ட நாட்களாக படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூட உதவியிருக்கலாம் என்கிறார்கள். 

எப்படியோ சிங்கிள் ஆக வந்து சிம்பு சிக்சர் அடித்தால் சரி...!


Post your comment





Related News
தெலுங்கில் வாலு படம் டப்!
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை
வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!
வாலு படத்தை வாங்கிய டிஆர்.?!
மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
\'வாலு\' படத்திற்கு வரவேற்பு ?
வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions