'வாலு' படத்திற்கு வரவேற்பு ?

Bookmark and Share

'வாலு' படத்திற்கு வரவேற்பு ?

இன்றைய இளம் நட்சத்திரங்களில் அஜித் - விஜய், ஆகிய இருவருக்கு அடுத்து போட்டிக் கூட்டணியாகப் பேசப்பட்டவர்களில் சிம்பு - தனுஷ் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தார்கள்.

தனுஷ், ஒரு பக்கம் தனது திறமையை வளர்த்துக் கொண்டு பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், ஹிந்தியில் அமிதாப்புடன் படம் என முன்னேறிக் கொண்டே சென்றார். ஆனால், தன்னுள் பல திறமைகளை வைத்திருந்தாலும் சிம்பு, தடம் மாறி ஓரளவிற்கு வெற்றி என்று வந்த நேரத்திலேயே நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என வேறு விதமாக செய்திகளில் அடிபட்டு பின்னோக்கிச் சென்றார்.

கடந்த சில வருடங்களாக அவர் நடித்து எந்தப் படமும் வராமல் தேங்கிக் கிடக்கிறது. சொந்தத் தயாரிப்பான 'இது நம்ம ஆளு' படத்தையே கிடப்பில் போடும் அளவிற்கு மனம் படைத்தவர்.

இருந்தாலும் கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து வருமா, வராதா என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த 'வாலு'  படம் மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை ரசிக்கும்படி இருப்பதால், சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம் ஆகியோரும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படம் இளைஞர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.

அதனால், கடந்த சில நாட்களாக இப்படத்தின் வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டு வினியோக உரிமையை சுமார் 2 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளதாம்.

தமிழ்நாட்டு வினியோக உரிமை வியாபாரமும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளதாம். சிம்பு, தனக்கிருக்கும் வரவேற்பை இனியாவது சரியாகப் புரிந்து கொண்டு படங்களில் சரிவர நடித்துக் கொடுப்பாரா என்பதே திரையுலகத்தினர் கேட்கும் கேள்வியாக உள்ளது.

 


Post your comment





Related News
தெலுங்கில் வாலு படம் டப்!
எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு
வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை
வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை
சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!
வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!
வாலு படத்தை வாங்கிய டிஆர்.?!
மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions