வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை

Bookmark and Share

வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை

சிம்பு-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் நீண்டகால இழுபறிக்குப் பின்னர் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கி ரிலீஸ் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை கோரி மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வெளியீட்டு உரிமையை தங்களிடம் கொடுத்து விட்டு அதை மீறி படத்தை வெளியிடவிருப்பதால் தடை கோரியது அந்நிறுவனம். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் இவ்வழக்கு இன்று (ஜூலை 14ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.

மேஜிக் ரேஸ் மற்றும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனங்களின் வாதங்களை கேட்ட நீதிபதி ‘வாலு’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பதால் 17-ம் தேதி திட்டமிட்டபடி வாலு ரிலீஸ் ஆகாது என்று தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கு தடை கேட்டு ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions