தெலுங்கில் வாலு படம் டப்!

Bookmark and Share

தெலுங்கில் வாலு படம் டப்!

சிம்பு என்றாலே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரை வைத்து படம் எடுக்க தயங்கி வந்தார்கள். ஏனென்றால் சர்ச்சைக்குரிய விசயங்களை பேசுவது, டைரக்டர்களிடம் மல்லுக்கு நிற்பது,  குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லாமல் தாமதமாக வருவது போன்ற காரணங்களாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு அவருக்கு தேக்கநிலை ஏற்பட்டது. தற்போது வாலு படம் மூலம் அவர் மீண்டு அச்சம் என்பது மடமையடா, கான் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

புதிய படமாக மெர்சல் படத்திலும் கமிட்டாகியிருக்கும் சிம்பு அவரது வாலு படத்தை தற்போது தெலுங்கிலும் டப் செய்து , ஷார்ப் என்ற பெயரில் அடுத்த மாதம் ஆந்திராவில் வெளியாகிறதாம். அங்கு ஹன்சிகாவுக்கு ஓரளவு மார்க்கெட் உள்ளதால் சிம்பு, ஹன்சிகா இடம்பெறும் போஸ்டர்கள் தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions