வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!

Bookmark and Share

வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்!

வாயை மூடி பேசவும் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம்  மாரி. இப்படத்தின் டீஸரும், பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் மாரி படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும்வகையில் மாரி படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சரத்குமார், மாரி படம் ஜூலை 17-ல் ரிலீசாகிறது என்று அதிகாரபூவமாக அறிவித்துவிட்டார்.

மாரி படம் வெளியாகும் அதே ஜூலை 17-ல்தான் சிம்பு நடித்திருக்கும்  வாலு படமும் வெளியாகிறது. 2012ல் தொடங்கப்பட்ட சிம்புவின்  வாலு கடந்த மூன்று வருடங்களில் பல தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும், அந்த தேதிகளில் ரிலீசாகவில்லை! இப்போது வாலு படத்தை வாங்கி டி.ராஜேந்தர் வெளியிடுவதால் இம்முறை ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்காது என்று சொன்னார்கள்.

இந்த சூழலில்தான் வாலு படம் வெளியாகும் ஜூலை 17-ஆம் தேதி மாரி படத்தையும் களத்தில் இறக்குகின்றனர். இது தற்செயலாக நடந்த விஷயமா அல்லது திட்டமிட்ட சதியா என தெரியாமல் சிம்பு தரப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிம்பு படம் வெளிவரும்போது தனுஷ் படமும் வந்தால் அவருடைய படத்துக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும். இதன் காரணமாக வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான் என்கின்றனர் வியாபாரிகள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions