சிம்புவுக்கு நிச்சயம் வாழ்க்கை தரும் வாலு - இயக்குநர் விஜய் சந்தர்

Bookmark and Share

சிம்புவுக்கு நிச்சயம் வாழ்க்கை தரும் வாலு - இயக்குநர் விஜய் சந்தர்

அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, சிம்புவை வைத்து தயாரித்துள்ள படம் வாலு. புதியவர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள இப்படம், இரு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஆரம்பமானது.

ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை, சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு உள்ளிட்ட பல பிரச்னைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே போனது. ஒருவழியாக தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

வாலு படம் பற்றி இயக்குநர் விஜய் சந்தர் நம்மிடம் கூறியதாவது,

நடுத்தர குடும்பத்து பையனின் வாழ்க்கை சம்பவம் தான் வாலு. இந்தப்படத்தில் சிம்பு, 'ஷார்ப்' என்ற ரோலில் நடிக்கிறார். திருவெற்றியூரை சுற்றி படமாக்கப்பட்டிருக்கும் வாலு படத்தில், சிம்பு பார்ப்பவர்கள் ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்று உணருவார்கள்.

எல்லோரது வாழ்க்கையிலும் அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்களை வாலு படம் நிச்சயம் ஞாபகப்படுத்தும். சிம்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவரை தூக்கி நிறுத்த போகிற படம் தான் இந்த வாலு.

நிச்சயம் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். சிம்பு - ஹன்சிகா காதல் முறிவால், இருவருக்கும் இடையேயான டூயட் பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட முடியவில்லை.

மற்றபடி பாடல்களும், படமும் சிறப்பாக வந்துள்ளது. வாலு படம் முழுவதையும் சிம்பு, அவரது அப்பா-அம்மா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் பார்த்தனர். படம் நன்றாக வந்திருப்பதாகவும், நிக் ஆர்ட்ஸால் படத்தை வெளியிட முடியாததால் படத்தை டி.ராஜேந்தரே ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

வாலு படம் கண்டிப்பாக ஜூன் 5ம் தேதி அல்லது ஜூன் 12ம் தேதி வெளிவரும். மேலும் இந்தப்படம் நிச்சயம் சிம்புவுக்கு வாழ்க்கை தருகின்ற படமாக இருக்கும் என்று அடித்து சொல்கிறார் விஜய் சந்தர்.


Post your comment





Related News
புதிய தொழில் துவங்கிய அனிருத்
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?
அஜித்தையே திணறவைத்த அனிருத்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions