ஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை

Bookmark and Share

ஜேம்ஸ் வசந்தின் - வானவில் வாழ்க்கை

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராய் நமக்கு பரீட்சயமான ஜேம்ஸ் வசந்தன், சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பளாராய் அறிமுகமாகி நம்மில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின் பசங்க, நாணயம், ஈசன் என நமக்கு அவரது இசையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தினார். தற்போது, ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனாராக புதிய அவதாரம் எடுத்து நம்மை மேலும் ஆச்சர்ய பட வைத்திருக்கிறார்.
 
இவர் இசையமைக்கும் படங்களைப் போல் இயக்கும் படத்திலும் வித்தியாசங்களுக்கு பஞ்சமே இல்லை. ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் ஒரு மியுசிக்கல் திரைப்படம். படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களாய் நடிக்கும் 11 புதுமுகங்களும்  இசை கலைஞர்கள். கர்டநாடக இசைக் கலைஞர் S. சௌமியா இப்படத்தில் முதன் முறையாக நடிக்கிறார், பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இப்படி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளமை ததும்பும் ஒரு திரைப்படமாய் வெளிவருகிறது.
 
“இசை எனது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. இங்கு படங்களுக்கு இசை முக்கியத்துவமாய் இருக்கிறதே தவிர, இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் எழுத யாரும் முயற்சிக்கவில்லை. நானே அத்தகைய கதை எழுத ஆரம்பித்து இன்று ‘வானவில் வாழ்க்கை’ என்ற மியுசிக்கல் திரைப்படமாக மாறியுள்ளது. மியுசிக்கல் என்றால் பாடல்களை பாடுபவர்களே, நடனம் ஆடி, நடித்தும் உள்ளனர்.”
 
“இப்படம் எனது கல்லூரி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மையமாக எழுதியிருக்கிறேன். இப்படத்தில் வரும் ஜாக் கதாப்பாத்திரம்தான் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் 17 பாடல்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வில் முக்கியமான உணர்வுக்கான ஒரு பாடலை முன்நிறுத்தியிருக்கும். இந்தப் படத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே நடித்துள்ளது. அனைவரும் இசைக்கருவிகள் வாசிக்கத்தெறிந்த பாடத்தெறிந்த இசைக்கலைஞர்கள். நடிப்பிற்கு இவர்கள் புதியவர்களே என்றாலும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இப்படம் இளைஞர்களாலான இளைஞர்களுக்கான ஒரு திரைப்படம். படத்தை பார்த்து ரசிகர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு லட்சம் போல் எங்களுக்கு” என்று சிரித்துக் கொண்டே கூறினார் ஜேம்ஸ் வசந்தன்.  


Post your comment





Related News
‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா
மார்ச் 13 உலகமெங்கும் வானவில் வாழ்க்கை வெளியாகவுள்ளது!
தள்ளிப்போனது வானவில் வாழ்க்கை
இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்
மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல்
வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு
புத்தாண்டு நள்ளிரவில் வானவில் வாழ்க்கை சிங்கிள் டிராக் வெளியீடு
சபாஷ் சரியான போட்டி!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions