சந்தேகத்தை ஏற்படுத்திய தனுஷின் புதிய கெட்டப்

Bookmark and Share

சந்தேகத்தை ஏற்படுத்திய தனுஷின் புதிய கெட்டப்

வாயை மூடி பேசவும் என்ற தோல்விப்படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் மாரி படத்தில் வட சென்னை தாதாவாக நடிக்கிறார் தனுஷ்.

அந்தப் படத்துக்காக முறுக்கிய மீசை மற்றும் தாடியுடன் காணப்பட்டார் தனுஷ். கடந்த மூன்று மாதங்களாக மேற்படி கெட்டப்பில் காணப்பட்ட தனுஷ், மாரி படப்பிடிப்பு முடிவடைந்த காரணத்தினால் சில தினங்களுக்கு முன் மீசை தாடியை மழித்தார்.

ஷேவ் பண்ணுவதற்கு முன்னதாக மாரி பட இயக்குநர் பாலாஜிமோகன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோருடன் செல்பி எடுத்து தன்னுடைய ட்விட்டரில் போட்டு தமாசு பண்ணினார் தனுஷ்.

அதன் பிறகு மீசை தாடியை மழித்த தனுஷ், கூடவே தன் ஹேர்ஸ்டைலையும் மாற்றிவிட்டார். தாடி மீசை இல்லாமல் புதிய ஹேர்ஸ்டைலில் சின்ன பையன்போல் தோற்றமளிக்கிறார் தனுஷ்.

இந்த கேரக்டரில்தான் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் நடிக்க இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் மீசை, தாடியுடன் நடித்தார். வேலையில்லா பட்டதாரி - 2 மீசையும் இல்லை, தாடியும் இல்லை. எனவே இந்தப்படம் வேலையில்லா பட்டதாரியின் அடுத்த பாகமா? அல்லது முந்தைய பாகமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
52 நாட்களில் படமாக்கப்பட்ட நஸ்ரியாவின் \'வாய் மூடி பேசவும்’..!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி இவ்வார வசூலில் முதலிடத்தில் முகமூடி!
நாளை ரீலிசாகும் ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய நடிகர் ஜீவா!
சென்சார் போர்ட்டால்'யு' சான்றிதல் அளிக்கப்பட்ட முகமூடி!
முகமூடி படக்குழுவின் தில்லு முல்லு? ரொம்பவே ஓவருங்க இது!
விஜய்க்கு புகழாரம் அமைதியாக இருந்த நடிகர் ஜீவா!
சூப்பர் ஹீரோ படமான ‘மூகமூடி’ ரசிகர்களின் விருந்தாக‌ ஆகஸ்ட் 31‍ல் வெளியீடு!
ஜீவாவின் முகமூடி ஆடியோவை விஜய் வெளியிடுகிறார்!
முகமூடியில் தினமும் 11Kg எடை உடையுடன் நடித்தேன் ஜீவாவின் வருத்தம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions