தனுஷ் நடிக்கும் வட சென்னை 2016ல் தான் ரிலீஸ்

Bookmark and Share

தனுஷ் நடிக்கும் வட சென்னை 2016ல் தான் ரிலீஸ்

'வேலையில்லா பட்டதாரி' படத்தின்  மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வேல்ராஜின் இயக்கத்தில் மீண்டும்  ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.  விஐபி - 2 என்று அழைக்கப்பட்டாலும் இன்னும் அதிகாரபூர்வமாக இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.  தனுஷின் அப்பாவாக கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் விஐபி -2 படத்துக்கு அனிருத்  இசையமைக்கிறார்.  

தனுஷ், எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் ஷெட்யூலில் படமாக்கப்பட்டன.  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஷெட்யூலில் சமந்தா, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது இரண்டாவது ஷெட்யூலும் முடிவடைந்து விட்டது.

விஐபி டீமின் பெயரிடப்படாத படத்தின் தற்போதைய ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது. சமந்தாவுடன் வேலை செய்தது ஒரு ஜாலியான அனுபவம்!  என்று  தனுஷ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். 'பொல்லாதவன், 'ஆடுகளம்' ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3 வது படம் இது.

'வடசென்னை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. 2016-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் ! 'வடசென்னை' படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions