என் குருவிற்கு நான் செய்யும் மரியாதைதான் ‘வெள்ளக்கார ராணி’ பாடல் – வடிவேல்

Bookmark and Share

என் குருவிற்கு நான் செய்யும் மரியாதைதான் ‘வெள்ளக்கார ராணி’ பாடல் – வடிவேல்

'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள்  வரிசையில் இயக்குனர் மிஷ்கினின்  பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல்  ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. புதுமுக இயக்குனர் J வடிவேல் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘கள்ளப்படம்’. சினிமாவில் சாதிக்க போராடும் நான்கு இளைஞர்களின் கதையாக கொண்ட இப்படம் மார்ச்20 ஆம் தேதி வெளிவருகிறது.

இயக்குனர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில் “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களை தவிர்க்கப் போவதாக கூறியுள்ளார். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது”.

“இந்த பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. அந்த பாடல் மிஷ்கின் சார் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்கின் சாரையே எழுதக் கேட்டு பின் பாடவும் கேட்டோம். இரண்டையும் எங்களை வாழ்த்தும் வகையில் செய்துக் கொடுத்தார் எனது குரு ” என்று முழு பூரிப்புடன் கூறினார் இயக்குனர் வடிவேல்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions