கேள்வி கேட்டால் அவதூறாக பேசுவது- வடிவேலு குற்றச்சாட்டு

Bookmark and Share

கேள்வி கேட்டால் அவதூறாக பேசுவது- வடிவேலு குற்றச்சாட்டு

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ம்தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் சரத்குமார் அணியினரும், விஷாலின் பாண்டவர் அணியினரும் செய்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மாலை பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல நாடக கலைஞர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் ஒவ்வொருத்தராக பாண்டவர் அணி வெற்றி பெற வாழ்த்துக்கூறி பேசினர்.

அதில் வடிவேலு பேசுகையில், ‘‘நடிகர் சங்கம் பற்றி கேள்வி கேட்டால் அவதூறாக பேசுகிறார்கள். எதிரணியில் உள்ளவர்கள் விஷால் அணியில் சேர வேண்டும் இது என்னுடைய வேண்டுகோள்’’ என்றார்.

பாக்யராஜ் பேசும்போது, “பாண்டவர் அணி அழுக்கற்ற அணி. இவர்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. நாடக நடிகர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதற்கு பாண்டவர் அணி ஜெயிக்க வேண்டும்’ என்றார்.

அதன் பின், விஷால் இளம் தலைமுறை நடிகர்களான ஜெயம் ரவி, ஆர்யா, சந்தானம், சூரி, விமல், ரமணா, விக்ராந்த், ஜீவா, சாந்தனு, உதயா, சித்தார்த், பசுபதி, சக்தி உள்ளிட்ட பலரை மேடையில் அறிமுகபடுத்தினார்.

 


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions